ஜார்கண்ட் முதல்வரின் கோரிக்கையை நிராகரித்தது அமலாக்கத்துறை
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வைத்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.


கல்குவாரி தொடர்பான வழக்கில் நவம்பர் 17ஆம் தேதி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஒருநாள் முன்னதாக ஆஜராக சோரன் தரப்பில் கோரிக்கை அளிக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை மறுத்துள்ளது.
தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு கல்குவாரியை தன் பெயரில் குத்தகைக்கு எடுத்ததாக அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் மீது ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டிருந்தாா்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜார்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதற்கிடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்த ஹேமந்த், அதில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் இரண்டாவது முறையாக நவம்பர் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து, ஒருநாள் முன்னதாக ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என ஹேமந்த் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.
முன்னதாக, நவம்பர் 3ஆம் தேதி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகி ஹேமந்த் சோரன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...