ஜார்கண்டில் அடுத்த 5 ஆண்டுகளில் பழங்குடிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பழங்குடி மக்களை சதித்திட்டம் தீட்டுபவர்கள் ஆள வேண்டும் என நினைக்கிறீர்களா? என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், பேசிய ஹேமந்த் சோரன், சில அரசியல் கட்சியினர் சதித்திட்டம் செய்து பழங்குடி மக்களை வெளியேற்றுகின்றனர். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியில், அமரவைத்தால் வெளியில் இருந்து வருபவர்களை அப்புறப்படுத்தி, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்துவேன். அதற்கு நீங்கள் எனக்கு துணை நிற்க வேண்டும். சதித்திட்டம் தீட்டுபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.