விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கடும் வீழ்ச்சியில் பேடிஎம் பங்குகள்!

பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில் 11 சதவிதம் குறைந்து வர்த்தகமானது.

News image
Updated On :17 நவம்பர் 2022, 4:16 pm

DIN

புதுதில்லி: பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில் 11 சதவிதம் குறைந்து வர்த்தகமானது.

ஜப்பானின் சாஃப்ட் பேங்க் ஒப்பந்த விதிமுறைகளின்படி, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்  4.5 சதவீத பங்குகளை ஒரே பிளாக் டீலில் விற்க தெடங்கியுள்ள நிலையில், முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஒன்97 பங்குகள் 10.31 சதவீதம் சரிந்து வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் அதன் விலை 10.31 சதவீதம் சரிந்து ரூ.539.55 ஆக இருந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் அதன் வர்த்தகம் 11 சதவீதம் குறைந்து ரூ.535.20 ஆக இருந்தது. வர்த்தகத்தின் இறுதியில் அது 10.78 சதவீதம் சரிந்து ரூ.536.60-க்கு விற்பனையானது. வர்த்தக அளவு அடிப்படையில், மும்பை பங்குச் சந்தையில் 43.24 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 5.72 கோடி பங்குகளும் வர்த்தகமானது. 

சாஃப்ட் பேங்க் அதன் துணை நிறுவனமான எஸ்விஎஃப் இந்தியா ஹோல்டிங்ஸ் மூலம் தான் வைத்திருக்கும் பங்குகளை ரூ.555 முதல் ரூ.601.55 வரை விற்க முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.