புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு

தில்லியில், புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு
Published on
Updated on
1 min read

தில்லியில், புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தோ்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் சனிக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா். 1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தோ்தல் ஆணைய குழுவில் இடம்பெறவாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னா், அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பாா்.

பின்னா், 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com