வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரசியலில் சகிப்புத்தன்மை அவசியம்: மம்தா பானர்ஜி

அரசியல் கொள்கைகளில் வேறுபாடுகள் இருப்பினும் அரசியல் எதிராளிகள் தங்களுக்குள் பரஸ்பர மரியாதை வைத்திருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 நவம்பர் 2022, 4:03 pm

DIN

அரசியல் கொள்கைகளில் வேறுபாடுகள் இருப்பினும் அரசியல் எதிராளிகள் தங்களுக்குள் பரஸ்பர மரியாதை வைத்திருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி இதனை தெரிவித்தார். பாஜக மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும், மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது: நாட்டில் அரசியல் சகிப்புத்தன்மை என்பது தற்போது இல்லை. அது துரதிஷ்டவசமானது. அரசியலமைப்பின்படி மக்கள் பிரதிநிதிகள் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். மதம், மொழி, இனம் அடிப்படையில் எந்த ஒரு பாகுபாடும் இருக்க கூடாது. ஆனால், நாம் அதற்கு மாறாக நாட்டில் பல விதமான சவால்களை சந்தித்து வருகிறோம். மக்களின் உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என்றார்.

முன்னதாக, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் மக்களின் உரிமையை பறிப்பதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.