பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பூஜாவுக்கு என்ன ஆச்சு? வாக்கர் வைத்து நடக்கிறார்!

கடந்த இரண்டு வாரங்களாக எப்படி நடக்க வேண்டும் என்பதை வாழ்க்கையில் இரண்டாவது முறையாகப் பயின்று வருகிறேன் என நையாண்டியுடன் பதிவிட்டுள்ளார்.

News image

நடை பயிலும் பூஜா!

Updated On :25 நவம்பர் 2022, 6:18 pm IST

காலில் காயம் ஏற்பட்ட பூஜா ஹெக்டே, மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மெல்ல மீண்டும் வரும் விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் பீஸ்ட், பாலிவுட்டில் ஹவுஸ்புல் 4 ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ராதே ஷியாம், வெற்றி பெறாவிட்டாலும் பூஜாவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றுத்தந்தது. 

பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் கபூருடன் சேர்ந்து நடித்த சர்கஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், புரோமோ பணிகளுக்கு மத்தியில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பூஜா ஹெக்டே, காயத்திலிருந்து மெல்ல மீண்டு வருகிறார். காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வருவதை தன்னுடைய ரசிகர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

Story image

அதில், செவிலியர் உதவியுடன் வாக்கர் வைத்து மெல்ல நடக்கப் பழகுகிறார். இது குறித்து பதிவிட்டுள்ள பூஜா, கடந்த இரண்டு வாரங்களாக எப்படி நடக்க வேண்டும் என்பதை வாழ்க்கையில் இரண்டாவது முறையாகப் பயின்று வருகிறேன் என நையாண்டியுடன் பதிவிட்டுள்ளார். என் வாழ்க்கையில் நாள்தோறும் செய்த செயலை என்னுடைய மூளை எப்படி மறந்தது என்பதை நினைக்கையில் வேடிக்கையாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.