இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்த ஆளில்ல விமானத்தை மகளிர் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்த ஆளில்ல விமானத்தை மகளிர் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

திங்கள்கிழமை இரவு 11,05 மணியளவில் அமிர்தசரஸ் நகருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் உள்ள சாஹர்பூர் கிராமத்திற்கு அருகே இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, பாதுகாப்புப் படையினர் அதை நோக்கிச் சுட்டு வீழ்த்தினர். 

தேடுதல் நடவடிக்கையில், ஆறு இறக்கைகள் கொண்ட சேதமடைந்த ஆளில்லா விமானம் ஒன்றைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். 

18 கிலோ எடை கொண்ட இந்த ஆளில்லா விமானத்தில் 3.11 கிலோ போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் அடியில் இணைக்கப்பட்டிருந்த வெள்ளை பாலிதீனில் சுற்றப்பட்டதாகவும் பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.

மகளிர் பாதுகாப்புப் படை வீரர்கள் மீண்டும் ஒரு விமானத்தைக் கைப்பற்றிக் கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளது. 

முன்னதாக நவம்பர் 25 அன்று அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com