வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த மம்தா!

வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். 

News image
Updated On :30 நவம்பர் 2022, 10:16 am

DIN

வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். 

பள்ளியைப் பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடியதோடு, இனிப்புகள் கொடுத்தும், மென்மையான பொம்மைகளைக் கொடுத்தும் மகிழ்ந்தார். 

பின்னர் ஹஸ்னாபாத்தில் உள்ள காபுகூர் உள்ளூர்வாசிகளை சந்தித்த அவர், குளிர்கால ஆடைகளையும் அவர்களுக்கு வழங்கினார். 

மேலும், ஹஸ்னாபாத் மக்களைப் பாதிக்கும் மற்றொரு பிரச்னை ஆற்றங்கரை அரிப்பு என்றும், குடிநீர் பிரச்னை குறித்தும் முதல்வரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

வங்காளத்தில் அடுத்தாண்டு பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.