போலியோ தடுப்புக்குழு மீது தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி!

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 
போலியோ தடுப்புக்குழு மீது தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி!

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

போலியோ தடுப்பு மருந்து முகாம்கள், குழுக்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவாட்டா நகரில் உள்ள பலேலி பகுதியில் இன்று போலியோ மருந்து முகாம் நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அழைத்துச் செல்லப்பட்டனர். 

அப்போது போலீஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட மூவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com