/

சத்தியத்தின் பாதை எளிதானது அல்ல: சந்யேந்தருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கேஜரிவால்! 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் அத்மி கட்சித் தலைவர் சத்யேந்தர் ஜெயின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:29 am

DIN

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் அத்மி கட்சித் தலைவர் சத்யேந்தர் ஜெயின் பிறந்தநாளை முன்னிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

அவர் சுட்டுரை பதிவில் வெளியிட்ட செய்தியில், 

இன்று சத்யேந்தர் ஜெயின் பிறந்தநாள்.போலி வழக்கு காரணமாக நான்கு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2017ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) பதிவு செய்த எஃப்ஐஆரின் அடிப்படையில் பணமோசடி வழக்கில் ஜெயின் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவருடன் தொடர்புடைய நான்கு நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்ததாக ஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சத்தியத்தின் பாதை எளிதானது அல்ல, இன்று பிறந்தநாள் காணும் சந்யேந்தருக்கு எனது வாழ்த்துகள் என்று சுட்டுரையில் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.