இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி மறைந்த விபின் ராவத்தின் சொந்த கிராமத்துக்கு சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் பௌரி கர்ஹ்வால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சைனா கிராமத்துக்கு முதல் முறையாக வாகனங்கள் செல்லும் வசதியுடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அந்த கிராமத்தில் மருத்துவமனையும், கல்வி மையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு, சைனா கிராமத்துக்கு சாலை வசதியும், மருத்துவமனையும் அமைய முயற்சிகளை மேற்கொண்டது.
உத்தரகண்ட் மாநில அரசின் உதவியோடு, இந்த மாநிலத்தில் சாலை வசதியை ஏற்படுத்திய நிலையில், மாநில அரசே கழிப்பறை, குடிநீர் தொட்டி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளது.
இந்தக் கிராமத்தில் உள்ள விபின் ராவத்தின் குடும்ப வீடு, நினைவிடமாக மாற்றப்படும் நிலையில், அந்த கிராமத்தின் அரசு அலுவலகங்கள் கூட கட்டடங்களாக மாற்றப்பட்டு, சூரிய மின்சக்தியில் இயங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.