தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ராஜஸ்தானில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மிதமான மற்றும் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 7:36 am

DIN

ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மிதமான மற்றும் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஜெய்ப்பூர் வானிலை மைய இயக்குனர் ராதேஷ்யம் சர்மா கூறுகையில், 

இந்த காலகட்டத்தில் கரௌலியில் அதிகபட்சமாக 118 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கிழக்கு ராஜஸ்தானில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது என்று  தெரிவித்தார்.

கரௌலி, தோல்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், ஜலாவர், பரன், சவாய் மாதோபூர் மற்றும் கோட்டா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் சஜ்ஜன்கர், பச்பஹார், சாப்ரா, தோல்பூர், பரன், கிஷன்கஞ்ச், சல்லோபட், அக்லேரா, மங்ரோல், மந்த்ரேயல், சௌத் கா பர்வாரா, சோட்டி சத்ரி மற்றும் பிபால்டா ஆகிய இடங்களில் தலா 70 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் 10-60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளைத் தவிர, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டம் காணப்பட்டதாகவும், உதய்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் பாரத்பூர் மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

கிழக்கு ராஜஸ்தானில் இந்த மழை அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்குத் தொடரும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.