காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒருபோதும் பின்வாங்குவதில்லை, இறுதி வரை போராட்டம்: சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்குவதில்லை, இறுதி வரை போராட்டம் நிகழ்த்த உள்ளதாக சசி தரூர் தெரிவித்தார். 
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒருபோதும் பின்வாங்குவதில்லை, இறுதி வரை போராட்டம்: சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்குவதில்லை, இறுதி வரை போராட்டம் நிகழ்த்த உள்ளதாக சசி தரூர் தெரிவித்தார். 

தேர்தல்களில் தீவிர பிரசாரத்தில் சசி தரூர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதாக வதந்திகள் வெளியானது. 

இதுகுறித்து சதி தரூர் காணொலி ஒன்றில் கூறியதாவது, 

நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சவாலில் இருந்து விலகவில்லை, ஒருபோதும் விலகவும் மாட்டேன். இது ஒரு போராட்டம். கட்சிக்குள் நிகழும் ஒரு நட்பு ரீதியிலான போட்டி.இறுதி முடிவு வரும் வரை நிச்சயமாக இருப்பேன் என்று அவர் கூறினார்.

அக்டோபர் 17-ம் தேதி வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் வந்து  எனக்கு வாக்களியுங்கள். என்னைப் பொறுத்தவரை நாளை சிந்தியுங்கள், தரூரைச் சிந்தியுங்கள் என்று அவர் கூறினார். 

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்பதால் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com