
சண்டிகர்: பஞ்சாப் காவல்துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் கடந்த 10 நாள்களில் மட்டும் ஐந்து பயங்கரவாதக் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 4 ஏகே ர துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் என 25 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்: நயன்தாரா விதி மீறலா?
மாநிலத்தில் அமைதியை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பஞ்சாப் காவல்துறை எடுத்துவருவதாக ஐஜிபி சுக்செயின் சிங் கில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து இந்தியாவில் சதிச் செயல்களை செய்ய திட்டமிட்டு வந்த ஐந்து குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கனடாவிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த நபரை செப்டம்பர் 28ஆம் தேதி பிகாரில் கைது செய்ததகாவும், அவர் ஏராளமான கொலை, கொலை முயற்சி, தாக்குதல், கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்திலும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு ஐந்து குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.