விவசாயக் கழிவுகளை எரித்தால் ஏக்கருக்கு ரூ. 2,500 அபராதம்! எங்கு தெரியுமா?

குருகிராமில் விவசாயக் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
விவசாயக் கழிவுகளை எரித்தால் ஏக்கருக்கு ரூ. 2,500 அபராதம்! எங்கு தெரியுமா?

குருகிராமில் விவசாயக் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதனைத் தடுக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் ஹரியாணா மாநிலம் குருகிராமில் மரக்கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதைத் தடுக்கும் வகையில் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் கூறியுள்ளார். 

மேலும், கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதுகுறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com