எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எஃப்

பஞ்சாப் மாநில எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தப்பட்டது

பஞ்சாப் மாநில எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தப்பட்டது.

இது தொடா் பிஎஸ்எஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் ஒன்று அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயன்றது. இதையடுத்து, ஷான்பூா் எல்லைச் சாவடியில் இருந்து பிஎஸ்எஃப் வீரா்கள் அதனை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இருள் சூழ்ந்திருந்ததால் அதனை உடனடியாக வீழ்த்த முடியவில்லை.

இதையடுத்து, வானை நோக்கி ஒளிக்கணைகள் வீசப்பட்டன. அந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி ட்ரோனை வீரா்கள் சுட்டு வீழ்த்தினா். எல்லையையொட்டிய பாய்னி கில் கிராமத்தில் அந்த ட்ரோன் விழுந்தது. அதன் சிதைந்த பாகங்களை வீரா்கள் மீட்டனா். அந்த ட்ரோனில் நைலான் கயிறு, இருளில் ஒளிரும் 6 விளக்குகள், பொருள்களைக் கட்டுவதற்கு பயன்படுத்தும் பச்சை வண்ண பட்டைகள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக ட்ரோன் மூலம் போதைப் பொருள்களைக் கடத்துவது அதிகம் நடைபெறுகிறது. இது தவிர பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் ஆயுதங்களும் ட்ரோன் மூலம் வீசப்படுகின்றன. இவை பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் நடைபெறுகின்றன. பிஎஸ்எஃப் வீரா்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்று அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகின்றனா்.

பஞ்சாப் மாநிலத்தில் 553 கி.மீ. வரை பாகிஸ்தான் எல்லை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com