ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மாணவனுக்கு நேர்ந்த கதி!
குஜராத் பள்ளி ஒன்றில் மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனையை பற்றி சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது.


குஜராத் பள்ளி ஒன்றில் மாணவனுக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனையை பற்றி சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது.
குஜராத்தில் உனா தாலுகாவில்உள்ள சரஸ்வதி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் கரண். இவன் சரியாக படிக்கவில்லையென்று ஆசிரியர் 200 தோப்புக்கரணங்களைப் போடுமாறு தண்டனை அளித்துள்ளார்.
தோப்புக்கரணம் போட்ட மாணவன் கரணுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவனுக்கு கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து வாந்தி எடுத்ததாகவும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
ஆனால் மருத்துவர்கள் அவரை ராஜ்கோட்டில் உள்ள ஒரு மருத்துவரிடம் பரிந்துரைத்தனர். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, கரணின் பெற்றோர் பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக் கல்வி ஆய்வாளருக்கு மாவட்ட கல்வி அதிகாரி ராஜேஷ் தோடியா உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...