ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு ஒரு மாதம் சிறை!

ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு ஒரு மாதம் சிறை!
Updated on
1 min read

ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்த இளைஞர்கள் 5 பேர் மங்களூருவில் இருந்து மட்கானுக்கு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். 

பயணச்சீட்டு குறித்து டிடிஇஆர் விசாரித்தபோது, அந்த 5 இளைஞர்களும் அலட்சியமாக நடந்துகொண்டு, இடையூறு ஏற்படுத்தினர். இது தொடர்பாக டிடிஇஆர் உடுப்பி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

காவல்துறையினர் இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை(ஆபிஎப்) ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு வந்து இளைஞர்களைப் பிடித்து, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு தலா ஒரு மாதம் சிறைத் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும், இடையூறு ஏற்படுத்தியதற்காக தலா ரூ.100 அபராதமும் விதித்து உடுப்பி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com