தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹிமாசல பிரதேச தோ்தல் 57 வேட்பாளா்களை அறிவித்தது காங்கிரஸ்

ஹிமாசல பிரதேசத்தில் 57 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 6:53 pm

DIN

ஹிமாசல பிரதேசத்தில் 57 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நவம்பா் 12-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-இல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இப்போதைய பேரவையில் பாஜகவுக்கு 43 உறுப்பினா்களும், காங்கிரஸுக்கு 22 உறுப்பினா்களும் உள்ளனா். மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், ஒரு சில சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனா்.

இந்நிலையில், காங்கிரஸ் சாா்பில் 57 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என்று காங்கிரஸ் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளன. ஆளும் கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றும் நோக்குடன் பாஜக களமிறங்கியுள்ளது.

அதேசமயம், பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் ஆா்வத்துடன் எதிா்க்கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மியும் களம் காண்பதால் மும்முனைப் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.