சூடுபிடிக்கும் தேர்தல்! குஜராத்தில் வாட் வரி 10% குறைப்பு; 2 சிலிண்டர்கள் இலவசம்!

குஜராத் மாநிலத்தில் மதிப்புக் கூட்டு வரி (வாட் வரி) 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தில் மதிப்புக் கூட்டு வரி (வாட் வரி) 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. 

சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய சிலிண்டர்கள் மீதான வாட் வரி குறைப்பதன் மூலம், நுகர்வோருக்கு சிஎன்ஜி சிலிண்டர் விலை ஒரு கிலோவுக்கு ரூ.7 ஆகவும், பிஎன்ஜி ரூ.6 ஆகவும் குறையும்.

அதோடு மட்டுமல்லாமல் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 2 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடனும் நிறைவடைகிறது.

ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலமும் முடிவடைகிறது. அங்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மீதான மதிப்பு கூட்டு வரியில் 10 சதவிகிதத்தை குஜராத் மாநில அரசு குறைத்துள்ளது.

இதன் மூலம், சிஎன்ஜி விலை ஒரு கிலோவுக்கு 7 ரூபாயும், பிஎன்ஜி கிலோவுக்கு 6 ரூபாயும் குறையும் வாய்ப்புள்ளது. சிஎன்ஜி மீதான வாட் வரியை குறைக்கும் நடவடிக்கை மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 14 லட்சம் சிஎன்ஜி வாகன உரிமையாளர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதலாக ரூ.1,650 கோடி அரசுக்கு செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com