ஆதார் அட்டையுடன் எத்தனை செல்லிடப்பேசி எண்களை இணைக்கலாம்? டெலீட் செய்வது எப்படி?

உங்கள் ஆதார் அட்டையுடன் இதுவரை எத்தனை செல்லிடப்பேசி எண்களை இணைத்திருக்கிறீர்கள் என்பதை அறியவும், பயன்பாட்டில் இல்லாத செல்லிடப்பேசி எண்களை அகற்றவும் இணையதளம் வாயிலாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையுடன் எத்தனை செல்லிடப்பேசி எண்களை இணைக்கலாம்? டெலீட் செய்வது எப்படி?
ஆதார் அட்டையுடன் எத்தனை செல்லிடப்பேசி எண்களை இணைக்கலாம்? டெலீட் செய்வது எப்படி?

உங்கள் ஆதார் அட்டையுடன் இதுவரை எத்தனை செல்லிடப்பேசி எண்களை இணைத்திருக்கிறீர்கள் என்பதை அறியவும், பயன்பாட்டில் இல்லாத செல்லிடப்பேசி எண்களை அகற்றவும் இணையதளம் வாயிலாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு விஷயங்களுக்கும் அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படுவது ஆதார் அட்டை தான். தடுப்பூசி போட்டுக் கொள்வது முதல் வங்கியில் கணக்குத் தொடங்குவது வரை அனைத்துக்கும் ஆதாரமாக மாறிவிட்டது ஆதார் அட்டை.

ஒருவர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது ஒரு செல்லிடப்பேசி எண்ணை கொடுத்திருப்பார்கள். பிறகு காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல செல்லிடப்பேசி எண்களும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

அவ்வாறு ஒரு ஆதார் அட்டையுடன் பல செல்லிடப்பேசி எண்கள் இணைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒருவர் தனது ஆதார் அட்டையுடன் எத்தனை செல்லிடப்பேசி எண்களை இணைக்கலாம் என்று கேட்டால் பதில் ஒன்பது என்று வருகிறது.

சரி உங்கள் ஆதார் அட்டையுடன் இதுவரை எத்தனை செல்லிடப்பேசி எண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் வாயிலாகவே, தேவையில்லாத பயன்பாட்டில் இல்லாத செல்லிடப்பேசி எண்களை நீக்கவும் செய்யலாம்.

அதாவது, TAFCOP என்ற இணையதளம் வழியாக அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவும். அங்கு உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடவும்.

பிறகு அந்த எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த எண்ணைப் பதிவுட்டு உள்ளே சென்றால், உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்லிடப்பேசி எண்களின் பட்டியல் கிடைக்கும். அதில் பயன்படுத்தாத மற்றும் உங்கள் செல்லிடப்பேசி எண் இல்லாத எண்களை நீங்கள் அகற்றவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேவையில்லாத மற்றும் உங்கள் செல்லிடப்பேசி எண்கள் அல்லாத எண்களை நீக்கி, ஆதார் எண் மற்றும் உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com