சொகுசுக் கார் பரிசு! துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய இளைஞர்!

பஞ்சாப் மாநிலத்தில் புது சொகுசுக்கார் வாங்கிய இளைஞர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிற
சொகுசுக் கார் பரிசு! துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய இளைஞர்!
Published on
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலத்தில் புது சொகுசுக்கார் வாங்கிய இளைஞர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் ஷுபம் என்ற இளைஞருக்கு அவரின் பெற்றோர் புதிய சொகுசுக் கார் ஒன்றை வாங்கி பரிசாகக் கொடுத்துள்ளனர். 

இதனால், மகிழ்ச்சி அடைந்த இளைஞர் தனது சொகுசுக் கார் முன்பு நின்றுகொண்டு, பொது இடம் என்றும் பாராமல் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளார். இதனால் சுற்றியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தாலும், சிலர் இளைஞரின் செயலால் ஈர்க்கப்பட்டு கைத்தட்டி வரவேற்றனர்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்ட இளைஞர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளைஞர் வைத்திருந்த துப்பாக்கி அங்கீகாரம் பெற்றதா, அல்லது யார் பெயரில் துப்பாக்கி பதியப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பஞ்சாபில் அதிக அளவில் துப்பாக்கி கலாசாரம் மேலோங்கியுள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2016 - 2020 ஆண்டுக்குள் துப்பாக்கி பயன்படுத்தியதாக 2,073 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் சராசரியாக ஆண்டுக்கு 400 வழக்குகள் அனுமதியற்ற துப்பாக்கி பயன்பாட்டிற்காக பதிவாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com