மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஹிமாசல் தேர்தல்: பாஜகவின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 9:40 am

DIN

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17-ல் தொடங்கி அக்டோபர் 25-ல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 29 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலையொட்டி கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 

அந்தவகையில் பாஜக, ஹிமாசல் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 62 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் கட்சியான பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

இதையடுத்து, 6 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 

தெஹ்ரா, ஜவாலமுகி, குலு, பர்சார், ஹரோலி, ராம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.