புது தில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அக்கட்சி தேர்தலில் மோசடி செய்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றால்தான், காந்தி குடும்பத்தின் ரப்பர் ஸ்டாம்பாகத் திகழ்வார் என்பதால், அவரை வெற்றிபெற வைக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டில் பாஜக தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய பின்னணி கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக, மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே, இவரை கடுமையான விமரிசித்து வரும் பாஜக, தற்போது அவரை ரப்பர் ஸ்டாம்ப் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கும் பாஜக, தற்போது, தலைவர் தேர்தலில் கார்கே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முறைகேடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதாவது கார்கேவுக்கு 88 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது 90 சதவீதத்துக்கு சற்றுத்தான் குறைவு. இதை அடிப்படையாக வத்து சசி தரூர் முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அந்த நடவடிக்கையும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, கார்கேவுக்கு சசி தரூர் வாழ்த்துக் கூறினார். ஆனால் முன்னதாக வாக்குகள் பதிவான போது முறைகேடு நடந்ததாக சசி தரூர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுவரை மன்மோகன் சிங்கை வைத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்ன செய்ததோ அதே ஃபார்முலா கார்கேவுக்கும் பொருந்தும் எனறும் பாஜக குறிப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்

நாகை மாவட்டத்தில் 86.30% வாக்குப்பதிவு

நாமக்கல்: திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களிப்பு

கும்மிடிப்பூண்டியில் 90.97 சதவீதம் வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


