முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அவர்கள் என்ன.. ? பாஜக எம்எல்ஏவின் கருத்து சர்ச்சை

முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை... அவர்களில் ஒருவரும் பணக்காரராக இருக்கவில்லையா என்று பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது
முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அவர்கள் என்ன.. ? பாஜக எம்எல்ஏவின் கருத்து சர்ச்சை
முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அவர்கள் என்ன.. ? பாஜக எம்எல்ஏவின் கருத்து சர்ச்சை


பாட்னா: முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை... அவர்களில் ஒருவரும் பணக்காரராக இருக்கவில்லையா என்று பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிறகென்ன.. லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளானாரோ இல்லையோ.. மக்களின் கோபத்துக்கு ஆளானதால், பாஜக எம்எல்ஏவின் உருவபொம்மையை கொளுத்தி பலரும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பாஜக எம்எல்ஏ லலன் பஸ்வான், இந்து தெய்வ வழிபாடு குறித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையாகியிருக்கிறது. 

தீபாவளியன்று நடைபெறும் லட்சுமி பூஜை குறித்து லலன் பஸ்வான் கூறுகையில், கடவுள் லட்சுமியை வழிபட்டால்தான் நமக்கு சொத்து சேரும் என்றால், முஸ்லிம்களில் பணக்காரர்களோ கோடீஸ்வரர்களோ இருக்கவே இல்லையா. ஏனென்றால் அவர்கள்தான் தேவி லட்சுமியை வழிபடுவதில்லையே?  அவர்களில் பணக்காரர்கள் இல்லாமலா போய்விட்டார்கள்? ஏன், அவர்கள் தேவி சரஸ்வதியைக் கூடத்தான் வணங்குவதில்லை. அவர்களில் நன்கு படித்தவர்கள் யாரும் இருக்கவில்லையா என்ன? அவர்களும் தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகிறார்கள்? என்று கருத்துக் கூறியிருந்தார்.

மேலும், அனைத்துமே மக்களின் நம்பிக்கைதான். ஆத்மா மற்றும் பரமாத்மாவுக்கு இடையேயான அன்பே மக்களின் நம்பிக்கையாக உள்ளது என்று கூறினார்.

இதோடு நின்றுவிடாமல், நீங்கள் நம்பினால் அது கடவுள். இல்லையென்றால் அது வெறும் கற்சிலை. எனவே, எல்லாமே நமது நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே உள்ளது. கடவுள் என்கிறோமா இல்லை என்கிறோமா? ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு வர அறிவியல்பூர்வமாக சிந்திக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதை நிறுத்திவிட்டீர்களானால், உங்களது அறிவுத்திறன் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.

பலரும் பஜ்ரங்பலியை வழிபட்டு, சக்தி பெறுவதாக நினைக்கிறார்கள். ஏன் முஸ்லிம், கிருஸ்துவர்களில் பலசாலிகளே இல்லையா? நீங்கள் நம்புவதை நிறுத்தும் இடத்தில் இவை அனைத்தும் முடிவுக்கு வரும் என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com