நீட் செய்த மாயம்: குரூப்-1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அக்டோபர் 16ஆம் தேதி தெலங்கானாவில் நடைபெற்ற குரூப்-1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, காவல்துறையினர் நடத்திய விதம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நீட் செய்த மாயம்: குரூப்-1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
நீட் செய்த மாயம்: குரூப்-1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி


அடிலாபாத்: அக்டோபர் 16ஆம் தேதி தெலங்கானாவில் நடைபெற்ற குரூப்-1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, காவல்துறையினர் நடத்திய விதம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தேர்வில் யாரும் மோசடி செய்து விடக் கூடாது என்பதற்காக, காவல்துறையினர், பெண்களை கடுமையாக சோதித்ததுடன், கையில் வளையல்,  தாலி, கம்மல், மூக்குத்தி போன்றவற்றைக் கூட கழற்ற வைத்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து, காவல்துறையினருக்கு எதிரான விமரிசனங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

தேர்வறைக்குள் நுழைய வேண்டும் என்றால், பெண்கள் ஒரு பொட்டு நகை கூட அணியக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டனர். தாலியைக் கூட கழற்றிக் கொடுக்கும் நிலைக்கு திருமணமான பெண்கள் தள்ளப்பட்டனர். வளையலை கழற்ற முடியாமல் பல பெண்கள் அவதிப்பட்ட நிலையில், கணவரின் கண் முன்னே, வளையல்களை உடைத்துவிட்டு ஏராளமான பெண்கள் தேர்வெழுதச் சென்றுள்ளனர்.

பல காலமாக இருக்கும் இந்து மக்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில், காவல்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமான பெண்கள் எப்போதுமே தாலியை கழற்றுவதில்லை. கையில் வளையலை கணவர் கண் முன்னே நொறுக்கியது மனதை வலிக்கச் செய்ததாக பெண்கள் கூறியுள்ளனர்.

பணியில் இருந்த காவலர்களின் அதீத கடமையுணர்ச்சியே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியரிடம் கேட்டபோது, டிஜிட்டல் பொருள்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் விரும்பத்தகாதது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com