தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பட்டாசுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்: சிவகாசியில் 1.5 லட்சம் பேர் வேலையிழப்பு

தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொழிலில் 1.5 லட்சம் மக்கள் வேலையிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பட்டாசுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்: சிவகாசியில் 1.5 லட்சம் பேர் வேலையிழப்பு

Updated On :20 அக்டோபர் 2022, 10:20 am


சிவகாசி: தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை மற்றும் பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொழிலில் 1.5 லட்சம் மக்கள் வேலையிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி விற்பனை களைகட்டினாலும், பட்டாசு விற்பனையில் நட்டமே நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 7 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்த பட்டாசுத் தொழிலில், தற்போது 1000க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவர்களில் 6.5 லட்சம் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துக்கான ஒரே வருவாயை இந்த பட்டாசு உற்பத்தி மூலமே ஈட்டிவந்தனர்.

பேரியத்துக்குத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த தொழிலில் 1.5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

பட்டாசு உற்பத்தியில் சரவெடிகள்தான் அதிக முக்கியத்துவம் பெறும். ஆனால் அதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது. சரவெடி முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படுவது. இதற்கு தடை விதிக்கப்பட்டதால் ஏராளமானோர் வேலையிழந்ததாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

விவசாயம் செய்ய வாய்ப்பில்லாத சிவகாசியில் பட்டாசு  தொழில்தான் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு தொழிற்சாலை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.