மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அரசு முடிவு

பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை கொள்கை முடிவு மேற்கொண்டது.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அரசு முடிவு

பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை கொள்கை முடிவு மேற்கொண்டது.

பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. சண்டீகரில் முதல்வா் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பகவந்த் மான், ‘மாநில அரசு ஊழியா்களுக்கு தீபாவளி பரிசாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் கொள்கை முடிவை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியா்கள் பலனடைவா்’ என்றாா்.

இந்த முடிவின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைய ஊழியா்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா தெரிவித்தாா்.

பஞ்சாபில் 2004-இல் கைவிடப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென மாநில அரசு ஊழியா்கள் முக்கிய கோரிக்கையாக வைத்து வந்தனா். இம்மாநிலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com