இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலியானது தீவிரப் பிரச்னை: சௌமியா சுவாமிநாதன்

இந்திய இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலியானது தீவிரப் பிரச்னை: சௌமியா சுவாமிநாதன்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தது மிகத் தீவிரமான பிரச்னை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தது மிகத் தீவிரமான பிரச்னை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள், மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த இருமல் மருந்துகளால் அந்த நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்துப் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், 'காம்பியாவில் குழந்தைகள் இறந்த சம்பவம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளுடன் தொடர்புடையது என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கை கூறுகிறது. இது ஒரு தீவிரமான பிரச்னை. இதனை தீவிர பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் கலந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட இந்திய அரசுடன் உலக சுகாதார அமைப்பு தொடர்பில் உள்ளது.

இந்தியாவில் மத்திய, மாநில அளவிலான மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளனர். அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள மருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வழிமுறைகள் இங்கு இல்லை. ஒருவருக்கொருவர் தயாரிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றில் இந்தியா முன்னணியில் இருக்கும் சூழ்நிலையில், எங்களிடம் மிகவும் வலுவான ஒழுங்குமுறை அமைப்பு உள்ளதை இந்தியா இந்நேரத்தில் நிரூபிப்பது முக்கியம்' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com