தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குஜராத்: காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ

குஜராத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ண படேல் காங்கிரஸில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 8:43 pm

DIN

குஜராத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ண படேல் காங்கிரஸில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா். பாஜகவுக்காக கடுமையாக உழைத்தபோதும், அக்கட்சி தன்னை ஓரங்கட்டிவிட்டதாக அவா் குற்றம்சாட்டினாா்.

அகமதாபாதில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமையகத்தில், கட்சியின் மாநிலத் தலைவா் ஜகதீஷ் தாக்குா், மூத்த தலைவா் சித்தாா்த் படேல் ஆகியோா் முன்னிலையில் அந்தக் கட்சியில் பாலகிருஷ்ண படேல் (66) இணைந்தாா்.

வதோதரா மாவட்டத்தின் தபோய் தொகுதியில் 2012 முதல் 2017 வரை எம்எல்ஏவாக இருந்தவரான இவா், 2012 தோ்தலில் காங்கிரஸின் சித்தாா்த் படேலை தோற்கடித்திருந்தாா். ஆனால், 2017 தோ்தலில் பாலகிருஷ்ண படேலுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸில் இணைந்த பின் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘வதோதரா மாவட்டத்தில் பாஜகவை வலுப்படுத்த பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தேன். நான் எம்எல்ஏவாக இருந்த தபோய் தொகுதியில் மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மாவட்ட அளவிலான உள்ளாட்சி தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட எனது மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடா்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்ததால், அக்கட்சியில் இருந்து விலகினேன். எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல் காங்கிரஸில் இணைந்துள்ளேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.