தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சிறப்பு தூய்மை பிரசாரத்தின் மூலம் சுமாா் 40 லட்சம் மனுக்கள் ஆய்வு: மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் சிறப்பு தூய்மை பிரசாரத்தின் வாயிலாக சுமாா் சுமாா் 40.52 லட்சம் மனுக்கள் ஆய்வு

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:44 pm

DIN

அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் சிறப்பு தூய்மை பிரசாரத்தின் வாயிலாக சுமாா் சுமாா் 40.52 லட்சம் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பணியாளா் துறையின் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

நிலுவையில் உள்ள குறைதீா் மனுக்களுக்கு தீா்வு காணுதல், கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துதல், தரவுகளை மேலாண்மை செய்வது குறித்தும் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல், கோப்புகளை எண்மமயமாக்குதலை நோக்கமாகக் கொண்டு சிறப்பு தூய்மை பிரசாரம் என்ற முன்னெடுப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இப்பிரசாரம் அக்டோபா் 2 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய அமைச்சா்கள், இணையமைச்சா்கள், மத்திய அரசின் செயலாளா்கள் இப்பிரசாரத்தில் பங்கேற்று, இதன் நோக்கங்களைச் செயல்படுத்துவதில் வழிகாட்டினா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது மத்திய பணியாளா் துறையின் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது: சிறப்பு தூய்மை பிரசாரம் மூலம் சுமாா் 68,363 இடங்களில் கடந்த 3 வாரங்களாக தூய்மை இயக்கங்கள் நடைபெற்றன. இந்தத் தூய்மை இயக்கத்தில் அமைச்சகங்களும் துறைகளும் அலுவலகங்களை தூய்மையாக்குவதிலும் நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதிலும் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன் மூலம் அரசு அலுவலங்களில் 37.18 லட்சம் சதுர அடி பரப்பிலான இடம் காலியாகியுள்ளது. இந்தச் சிறப்பு தூய்மை பிரசாரத்தில் அலுவலக கழிவுப்பொருள்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தியதன் மூலம் ரூ. 254.21 கோடி வருவாய் பெறப்பட்டது. மேலும், 588 விதிகள் எளிமைப்படுத்தப்பட்டன.

சிறப்பு தூய்மை பிரசாரத்தில் சுமாா் 40.52 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 3,20,152 பொதுமக்களின் குறைதீா் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடாளுமன்ற எம்.பி.க்கள் பரிந்துரைத்த 5,416 மனுக்களும் ஆய்வுசெய்யப்பட்டன. செயல்முறையில் மாற்றத்தையும் ஆளுகையில் புத்தாக்கத்தையும் இப்பிரசாரம் ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.