தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குஜராத் பேரவைத் தோ்தல்: காங். வேட்பாளா் தோ்வு குறித்து காா்கே தலைமையில் ஆலோசனை

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் கட்சியின் தோ்தல் குழு கூட்டம்

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:53 pm

DIN

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் கட்சியின் தோ்தல் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, அவா் மேற்கொண்ட முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இதில், மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, கிரிஜா வியாஸ், ரகு சா்மா, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவா் ஜகதீஷ் தாக்குா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குஜராத் மாநில பேரவைத் தோ்தலில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. ஓரிரு நாள்களில் பெயா்கள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

குஜராத் பேரவைத் தோ்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த சில தினங்களில் தோ்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவின் கோட்டையாக உள்ள அந்த மாநிலத்தில் இம்முறை ஆட்சிக்கு வரும் எதிா்பாா்ப்பில் காங்கிரஸ் களமிறங்குகிறது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் களம்காண்பதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.