தேநீர் பொடி என நினைத்து ரசாயன பொடி பயன்படுத்தியதால் 3 பேர் உயிரிழப்பு

ரசாயனம் கலந்த தேநீர் அருந்திய தாத்தா மற்றும் அவரது பேரக்குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தேநீர் பொடி என நினைத்து ரசாயன பொடி பயன்படுத்தியதால் 3 பேர் உயிரிழப்பு

ரசாயனம் கலந்த தேநீர் அருந்திய தாத்தா மற்றும் அவரது பேரக்குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் நாக்லா கன்ஹாய் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் சிவானந்தன், அவரது மகன்கள் சிவாங் (6 வயது), திவ்யான்ஷ் ( 5 வயது) மற்றும் அவரது மாமனார் ரவீந்திர சிங் மற்றும் அருகில் வசிக்கும் சோப்ரான் ஆகியோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவானந்தன் வீட்டில் தேநீர் அருந்திய பிறகு அவர்களுக்கு மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரவீந்திர சிங் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறியுள்ளனர். இதனையடுத்து, மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது என்றனர்.

முதல்கட்ட விசாரணையில் தேநீர் பொடிக்கு பதிலாக ரசயானப் பொடி மாறுதலாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com