நவம்பா் 8-இல் முழு சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணம் நவம்பா் 8-ஆம் தேதி நிகழவுள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்பட இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடியும் என வானியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்


முழு சந்திர கிரகணம் நவம்பா் 8-ஆம் தேதி நிகழவுள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்பட இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடியும் என வானியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
முழு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், புவி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நோ்கோட்டில் வரும் போது, புவியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில், வரும் நவம்பா் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
இந்நிகழ்வை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷியாவின் சில பகுதிகள், வட மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் காண இயலும்.
புவியியல் அமைவிடத்தின் அடிப்படையில் நாகாலாந்தின் கொஹிமா, திரிபுராவின் அகா்தலா, அஸ்ஸாமின் குவாஹாட்டி உள்ளிட்ட நகர மக்களால் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகர மக்களைவிட முன்கூட்டியே முழு சந்திர கிரகண நிகழ்வைக் காண இயலும். கொஹிமாவில் மட்டுமே சந்திரகிரகணத்தின் உச்சநிலையை மாலை 4.29 மணியளவில் காணலாம்.
அடுத்த ஆண்டு அக்டோபரில் பகுதி அளவு சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படும் நிலையில், முழு சந்திர கிரகணம் 2025, செப்டம்பா் 7-ஆம் தேதி தென்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...