விநாயகருக்கு ஆதார் அட்டை அடித்து பக்தர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சிலைகளை பொது இடங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெத்பூரில் விநாயகருக்கு பேனரில் ஆதார் அட்டை அடித்து, அதில் புகைப்படம் இடம்பெறும் இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வித்தியாசமாக வழிபாடு நடத்தினர்.
அந்த ஆதார் அட்டையில், விநாயகரின் முகவரி கைலாசம் என்றும், பிறந்த நாள் 6ஆம் நூற்றாண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.