தில்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்றார்.
தில்லி ஆளுநரை பதவி விலக வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும், மதுவிலக்கு கொள்கை மூலம் ஊழல் செய்ததாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் தில்லி சட்டப்பேரவையில் விடிய விடிய போட்டி போராட்டம் நடத்தியிருந்த நிலையில், கேஜரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 58 வாக்குகள் பெற்று கேஜரிவால் வெற்றி பெற்றார்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனா். இன்றைய வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 58 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

மீதமுள்ள நான்கு பேரில், பேரவைத் தலைவர் கனடாவில் உள்ளதால், துணை பேரவைத் தலைவர் அவை நடவடிக்கைகளை மேற்கொண்டார். மீதமுள்ல இருவரில், எம்.எல்.ஏ. நரேஷ் பல்யான் ஆஸ்திரேலியாவிலும், சத்யேந்திர ஜெயின் சிறையிலும் உள்ளதால் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அப்போது முதல்வர் கேஜரிவால் பேசியதாவது:
“துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரது வீடு, வங்கி கணக்குகளில் சோதனை செய்த சிபிஐ எதையும் கைப்பற்றவில்லை.
சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக, குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மியின் வாக்கு சதவிகிதம் 4ஆக இருந்தது. ஆனால், தற்போது 6-ஆக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டால் மேலும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.
எனது இரண்டு குழந்தைகளும் ஐஐடியில் படித்தார்கள். அதேபோல், நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரள லாட்டரி விற்றதாக முதியவா் கைது
புகையிலை கொண்டு சென்றவா் கைது

பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரிக்கை!
அதிபர் டிரம்ப்பை பதவி நீக்க 2 வாக்குகள் குறைவு! ஜனநாயக கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா?
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

