
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் பாகங்களான தலை, கை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜபல்பூரில் அரசு நடத்தும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனை அருகேயுள்ள சந்தையில் துணியால் சுற்றப்பட்ட உடல் பாகங்களான தலை மற்றும் கையை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த நகரக் காவல் கண்காணிப்பாளர் துஷார் சிங் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். மற்ற உடல் பாகங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சந்தையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல் உறுப்புகளும் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.