
பிரபல சமூக சேவகர் மேரி ராய் உடல்நலக் குறைவால் இன்று காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்கு வயது 89. சிரியன் கிறிஸ்துவப் பெண்களுக்கு, அவர்களின் மூதாதையர் சொத்தில் சம உரிமை கிடைக்க சட்டப்பூர்வமாக போராடியவர் மேரி ராய்.
இவர், பிரபல எழுத்தாளரும், கல்வியாளரும் ஆவார். மேன் புக்கர் பரிசு வென்ற அருந்ததி ராயின் தாயார் ராய் புகழ்பெற்ற பள்ளி ஒன்றையும் நிறுவியுள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கோட்டயத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகூடா அருகே உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
அவரது உடல் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.