பிரதமரை எப்போதும் குறை கூறுபவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி அழுகிறார்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

பிரதமரை எப்போதும் குறை கூறுபவர்கள் பேச்சு சுதந்திரம் இல்லை என அழுகிறார்கள் என்று கடுமையாகத் தாக்கியுள்ளார்.  
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு


புதுதில்லி: கருத்துச் சுதந்திரம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிரதமரை எப்போதும் குறை கூறுபவர்கள் பேச்சு சுதந்திரம் இல்லை என அழுகிறார்கள் என்று கடுமையாகத் தாக்கியுள்ளார்.  

தேசிய நாளிதழ் ஒன்றுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அளித்த பேட்டியின்போது, இன்று நிலைமை மோசமடைந்து காணப்படுகிறது. நான் ஒரு பொது இடத்தில் நின்றுகொண்டு, எனக்கு பிரதமரின் முகம், பார்க்க பிடிக்கவில்லை என கூறினால், சிலர் என்னைத் தாக்க வரலாம். எந்த காரணமுமின்றி என்னை கைது செய்து, எந்த காரணமும் சொல்லாமல் சிறையில் தள்ளலாம். இப்போது குடிமக்களாக நாம் அனைவரும் இதனையே எதிர்க்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உண்மையில் இதனை கூறினாரா? என எனக்கு தெரியாது. "அது உண்மையாக இருந்தால், அவரது பேச்சே அவர் பணியாற்றிய அமைப்பை இழிவுபடுத்துவதாகும்," என்று யாரையும் பெயரிடாமல் தெரிவித்து உள்ளார். 

மேலும், “பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை துஷ்பிரயோகம் செய்ய எந்த தடையும் இல்லாமல் எப்போதும் பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி அழுகிறார்கள்! 

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல பிரதமரை எந்த நேரமும் தடைகள் எதுவுமின்றி தரக்குறைவாக எந்த மக்கள் பேசுகின்றார்களோ, அவர்கள் வந்து பேச்சு சுதந்திரம் இல்லை என்று அழுகிறார்கள்! காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள், சில மாநில கட்சி முதல்வர்களை பற்றி விமர்சிக்கக் கூட ஒருபோதும் அவர்களுக்கு தைரியம் வந்தது இல்லை என்றும் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com