
நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரல் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்க பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், "2022-23 ஆம் ஆண்டு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி இருக்கும்" என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள், ஆனால், ரிசர்வ் வங்கி அவரது கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
இதையும் படிக்க | செப்.7ல் வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்: தேசிய தேர்வு முகமை
I had also pointed out that in the answer to a question, the MHA said that the government had "no information" on the tukde-tukde gang!
— P. Chidambaram (@PChidambaram_IN) September 4, 2022
If the Home Minister of MP has more information than the Union Home Minister, he should be appointed as the Union Home Minister!
நான்கு காலாண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியின் கணிப்பு 16.2, 6.2, 4.1 மற்றும் 4.0 ஆகும். இதன்படி ஆண்டு வளர்ச்சி சுமார் 7.5 சதவிகிதமாக இருக்கும்.
அதேவேளையில், நாம் முதல் காலாண்டை ரிசர்வ் வங்கி கணித்ததைவிட குறைவாக அதாவது 13.5 சதவிதத்துடன் தொடங்கியிருக்கிறோம்.
அடுத்த மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்?
"2022-23 இல் இரட்டை இலக்க பொருளாதர வளர்ச்சி" என்பது அடைய முடியாத கனவாகவே தோன்றுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.