செப். 7-ல் நீட் தேர்வு முடிவுகள்!

இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7 ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7 ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 497 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 

இந்நிலையில், சில மையங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 30 ஆம் தேதி விடைத்தாள்கள் வெளியிடப்பட்ட நிலையில்,  நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://neet.nta.nic.in இல் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இந்த முறை, 18 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுத் தேர்வு முடிவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, எம்சிசி நீட் யுஜி கவுன்சிலிங் அட்டவணையை வெளியிடுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் இம்மாதமே முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமானதால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com