ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக: முதல்வர் 

உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌலிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :4 செப்டம்பர் 2022, 6:57 am

DIN

உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌலிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

“உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். மேலும், தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். 

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். சென்னையில் அமைந்துள்ள பல்வேறு பாரம்பரிய கட்டிடங்களை நாம் செம்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும். நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பது என்பது வரலாற்றைப் பாதுகாப்பது பேன்றதாகும். சென்னை சட்டக் கல்லுரியை புதுப்பிக்க கூடிய பணியால் நான் பெருமைக் கொள்கிறேன். நீதியும் நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் கலந்தவை” என நீதித்துறை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.