ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா

ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி வழங்கியது அமெரிக்கா

tanker carrying crude oil

கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் - AP

Published On :

கடலில் உள்ள ஈரானின் கப்பல்களிலிருந்து கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மீதான தடைகள் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நடுக்கடலில், ஈரானின் கப்பல்களில் ஏற்கனவே உள்ள கச்சா எண்ணெய், பிற பெட்ரோலிய பொருள்களை விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான போர் தொடங்கி கடந்த இரண்டு வாரங்களில், ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, மார்ச் 20ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், ஈரான் மீது அமெரிக்கா - ஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, உலகளவில் எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், நடுக்கடலில் நிற்கும் ஈரான் நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களில் இருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிபொருள்களை உலக நாடுகளுக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷிய நாட்டிடமிருந்து, கச்சா எண்ணெய் வாங்கவும் அமெரிக்கா வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், ஈரானிடமிருந்தும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கச்சா எண்ணெய் வாங்க அனுமதி வழங்கியிருக்கிறது.

இது அனுமதி தற்காலிகமானதுதான் என்பதையும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.