பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் மாயம்!

பாட்னாவின் ஷாபூர் பகுதியில் கங்கை ஆற்றில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 10 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் மாயம்!
Published on
Updated on
1 min read

பாட்னா: பாட்னாவின் ஷாபூர் பகுதியில் கங்கை ஆற்றில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 10 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஷாப்பூர் காவல் நிலையத்தின் எஸ்எச்ஓ ஷரீப் ஆலம் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு கங்கஹாரா தீவுக்குச் சென்று கால்நடைகளுக்கு தீவனங்கள் சேகரித்துக் கொண்டு அங்கிருந்து  திரும்பிய போது விபத்து ஏற்பட்டது. பலத்த நீரோட்டம் காரணமாக இரு படகுகள் மோதி விபத்து ஏற்பட்டது. 

படகுகளை ஓட்டியவர்கள் படகுகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால் படகுகள் மோதி விபத்துக்குள்ளனதில், ஒரு படகு கவிழ்ந்தது.  கவிழ்ந்த படகில் 55 பேர் பயணித்தனர். இதில் 45 பேர் நீந்திக் கரைக்கு வந்தனர். 10 பேரைக் காணவில்லை. 

காணமல் போன பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர்  ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com