ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலவீனம், அதிமுகவிற்கு பலம்: ஆர்.பி.உதயகுமார்
ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலவீனம், அண்ணா திமுகவிற்கு பலம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருப்பது குறித்து...


கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சிலர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் முகாம் மாரி சென்று இருக்கிறார்கள். அதை பற்றி கவலைப்பட மாட்டோம் என்றும் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலவீனம், அதிமுகவிற்கு பலம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:
வரும் ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி. கே. வாசன் உள்ளிட்டவர் கலந்து கொள்ளவுள்ளனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக 3000-க்கும் மேற்பட்டோர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இன்று அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்
வரக்கூடியவர்களுக்கு காவல்துறையினருடன் சேவை செய்வதற்காக குடிநீர் கழிப்பறை மருத்துவ வசதி உள்ளிட்ட அதற்கான வழிகாட்டுதலுக்காக 2500-க்கு மேற்பட்டோருக்கு அம்மா பேரவை சார்பாக பயிற்சி மற்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, புரட்சித் தலைவர், தலைவி தொடர்ந்து பல சவால்களுக்கு மத்தியில் அதிமுகவை எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். அவரை ஏற்றுக்கொண்டு இரண்டரை கோடி தொண்டர்களும் 8 கோடி தமிழர்களும் வரவேற்றுள்ளனர். ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடு காரணமாக ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தான் முகாம் மாரி சென்று இருக்கிறார்கள். அதை பற்றி கவலைப்பட மாட்டோம்.
புரட்சித்தலைவர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலே தேர்தல் காலங்களில் வேறு முகாம்களுக்கு செல்வதும் வருவதும் நடப்பதுதான். மக்கள் அவற்றை பொருட்படுத்த மாட்டார்கள்.
உலக நாடுகள் அங்கீகரித்த பிரதமர் மோடி
இந்திய மக்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளது. பிரதமர் மோடியின் பிரசாரத்தை திசை திருப்புவதற்காகவும் மடை மாற்றம் செய்வதற்காகவும் இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் என்று சொல்லி குழப்பமான நிலையை தான் தமிழக மக்களுக்கு செய்தியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதிமுக என்றால் எடப்பாடியாரின் ஒப்புதல் வாக்கு மூலமாகத்தை மகாபாரதம் நடவடிக்கையாக பார்க்கிறோம். இதனால் எந்த விளைவும் தாக்கமும் ஏற்படாது.
பத்தாயிரம் உதவித்தொகை மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்கிற அறிவிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவருக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ வசதியை சாமானியங்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டம் எய்ம்ஸ்.
அதிமுகவுக்கு உரிமைக்கோரியவர்கள் இப்போது எடப்பாடி பழனிச்சாமி தான் என புகழ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
இனி நீதிமன்றம், மக்கள் மன்றம் என்ற புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் கொண்டாட்டம்.
மதுரை எய்ம்ஸ் நாங்கள் கால அவகாசம் என்று சொல்கிறோம். நீங்கள் காலதாமதம் என்று சொல்கிறீர்கள். திட்டம் பயனுள்ளது. நீங்கள் செங்கலை தூக்கி அலைந்தாலும் செங்கோல் எடப்பாடியாருக்கு தான்.
திமுகவின் சர்வாதிகார, கொடுங்கோல், மன்னர் ஆட்சிக்கு முடிவுரை எழுத நினைக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது.
தேர்வுக்கு சென்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்று சொல்வார்கள் அதேபோல விஜய் சொல்கிறார்.
அதிமுகவில் இருந்தபோதே ஓபிஎஸ் எல்லா பதவியையும் அனுபவித்து விட்டார். அமைச்சரவையில் பல பொறுப்புகள் வகுத்துள்ளார்.
இந்த நிலையில் திமுகவில் தஞ்சம் அடைந்துள்ள ஓபிஎஸ்ஸை அங்கு முதல்வராக அறிவிப்பார்களா, அதிமுகவில் தான் சாமானியனையும் முதல்வராக அறிவிப்பார்கள்.
ஓபிஎஸ் சென்றது திமுகவிற்கு பலவீனம், அண்ணா திமுகவிற்கு பலம் என அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...