ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகிய, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று(பிப். 27) முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
எப்பொழுது... ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும்.. தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன்....
ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ, எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்களோ,அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்....
இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள்தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையைதான் எண்ண வேண்டி இருக்கிறது...
ஓபிஎஸ்ஸின் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்" என்று பதிவிட்டுள்ளார்.
வரà¯à®®à¯ à®à®à¯à®à®®à®©à¯à®±à®¤à¯ தà¯à®°à¯à®¤à®²à®¿à®²à¯ நிà®à¯à®à®¯à®®à®¾à® திராவி஠மà¯à®©à¯à®©à¯à®±à¯à®± à®à®´à®à®®à¯ தà¯à®²à¯à®µà®¿à®¯à¯ à®à®¨à¯à®¤à®¿à®à¯à®à®ªà¯ பà¯à®à®¿à®±à®¤à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à®à®©à¯à®±à¯ à®à®¾à®²à¯ à®à®±à¯à®¤à®¿ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. ... à®à®ªà¯à®ªà¯à®´à¯à®¤à¯... à®à®ªà®¿à®à®¸à¯ à®à®µà®°à¯à®à®³à¯ தனிபà¯à®ªà®à¯à® à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®µà®°à¯ à®®à¯à®¤à¯ à®à®µà¯à®µà®³à®µà¯ மரியாத௠à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯.. தனத௠வாயால௠மà¯à®£à¯à®à¯à®®à¯ திராவி஠மà¯à®©à¯à®©à¯à®±à¯à®± à®à®´à®à®®à¯â¦
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) February 27, 2026
Summary
OPS in the party that Jayalalithaa opposed all her life: Tamilisai soundararajan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?

கோயில் நிலங்கள் சூறையாடப்படுவது வேதனை அளிக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநரின் அமைதியான உரை! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK | DMK

மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம்: தமிழிசை சௌந்தரராஜன்
விடியோக்கள்

நாடாளுமன்றம் வர தைரியமில்லாத உள்துறை அமைச்சர் ராகுல்காந்தி பேச்சு



