புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை உருவாக்க குழு
தேசிய அளவில் புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைக்கப்படும் என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை


தேசிய அளவில் புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைக்கப்படும் என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
மேலும், இதை முன்னிட்டு மாநிலக் கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டை வியாழக்கிழமை (செப்டம்பர் 8) மத்திய அரசு கூட்டியுள்ளது. தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கக் குழுவில் நாடு முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்கள் இடம் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அதிகாரத்தில் உள்ள கூட்டுறவுகளில் மத்திய அரசு தலையிடுகிறது என்கிற விமர்சனங்களுக்கிடையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டிலுள்ள பெரும்பான்மை கூட்டுறவு சங்கங்கள் பெயர் அளவிற்கு மட்டுமே இருந்து சரியாக செயல்படாத நிலையில் இதை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க தேசிய அளவில் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்பு "கூட்டுறவே நாட்டுயர்வு' என்கிற மந்திரம் பிரபலமாக இருக்க, தற்போது பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் "ஒத்துழைப்பின் மூலம் வளம்' (சஹகர் சே சம்ரித்தி) என்கிற புதிய கோஷத்துடன் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்காக புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது எனவும் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தேசிய அளவிலான குழு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் அமைக்கப்படுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்கள் இடம் பெறுவர். உறுப்பினர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்ளும் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்களின் 2 நாள் மாநாடு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தேசிய கூட்டுறவின் புதிய கொள்கை, புதிய கூட்டுறவு திட்டங்கள், தரவுகள், கணினிமயமாக்கல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வங்கி, வேளாண்மை, பால், மீன் வளம், வீட்டுவசதி, நெசவு போன்ற துறைகளில் கடன் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...