பெங்களூரு மூழ்கிக் கொண்டிருந்தபோது தோசைக் கடைக்கு விளம்பரமா? பாஜக எம்.பி.யை வறுத்தெடுக்கும் மக்கள்

பெங்களூரு கனமழை, வெள்ள்ததில் மூழ்கிக் கொண்டிருந்த போது தோசைக் கடையை புகழ்ந்து போட்ட விடியோ பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
பெங்களூரு மூழ்கிக் கொண்டிருந்தபோது தோசைக் கடைக்கு விளம்பரமா?
பெங்களூரு மூழ்கிக் கொண்டிருந்தபோது தோசைக் கடைக்கு விளம்பரமா?


பெங்களூரு: பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு கனமழை, வெள்ள்ததில் மூழ்கிக் கொண்டிருந்த போது தோசைக் கடையை புகழ்ந்து போட்ட விடியோ பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பத்மநாபாநகரில் உள்ள உணவகத்தில் பட்டர் மசாலா தோசையும் உப்புமாவும் சாப்பிட்டுவிட்டு, அதன் ருசியை ஆஹா ஓஹோ என புகழும் விடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவியது.

அந்த விடியோவில், தோகை நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்லாமல், மக்கள் அனைவரும் இந்தக் கடைக்கு வந்து தோசை சாப்பிடுமாறு அவர் மக்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

ஆனால் என்ன, அந்த விடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல் மட்டும் இல்லை. எனினும் விடியோ செப்டம்பர் 5ஆம் தேதி சுட்டுரையில் பகிரப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது இந்த விடியோவை வெளியிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊரக ஒருங்கிணைப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள கடையில் தோசை சாப்பிட்ட விடியோவைப் பகிர்ந்த தேஜஸ்வி சூர்யா, வெள்ளம் பாதித்த ஒரு பகுதியையாவது நேரில் வந்து பார்வையிட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடியோவை பலரும் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் முன்வைத்திருந்தனர். ரோம் நகரம் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தார் நீரோ! பெங்களூரு மூழ்கிக் கொண்டிருந்த போது தோசை சாப்பிட்டார் தேஜஸ்வி சூர்யா என்று ஆம் ஆத்மி தலைவர் பிரித்வி ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

சிலர் ஒரு படி மேலேச் சென்று, சூரியாவை காணவில்லை என்று டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com