நீட் தோ்வில் 4 பேர் ஒரே மதிப்பெண் எடுக்க ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நீட் தேர்வில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா்.

நீட் தேர்வில் தனிஷ்கா உள்பட நான்கு பேர் 715 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். இவர்களில் தனிஷ்கா முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தில்லியைச் சோ்ந்த வத்ஸா ஆசிஷ் பாத்ரா, ரிஷிகேஷ் கங்குலே, கர்நாடகத்தைச் சேர்ந்த ருச்சா பவாஷே ஆகியோரும் 715 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக 9.93 லட்சம் போ் இத்தோ்வில் வெற்றி பெற்றனா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

ஒரே மதிப்பெண்ணை இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எடுக்கும் போது அவர்களுக்குள் தரவரிசையில் பட்டியலிடும் முறைக்கு வயதை கருத்தில் கொள்ளும் முறையை தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு மாற்றியமைத்திருந்தது.

அதன்படி, இந்த ஆண்டு ஒரே மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அ. ஒரே மதிப்பெண் எடுத்த நான்கு பேரில் உயிரியியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை.
ஆ. அதிலும் ஒரே மதிப்பெண் இருந்தால், அடுத்து வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
இ. அடுத்து இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்ணும்
ஈ. உயிரியியல் பாடத்தில் எத்தனை கேள்விகளுக்கு தவறான பதிலளித்திருந்தார், எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருக்கிறார் என்பதும்
உ. வேதியியல் பாடத்தில் மாணவர்கள் எத்தனை கேள்விகளுக்கு தவறான பதிலளித்திருந்தார், எத்தனை கேள்விகளுக்கு சரியான பதிலளித்திருந்தார் என்பதும் கணக்கில் எடுக்கப்பட்டு முதல் இடத்தைப் பிடித்தவர்கள் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா் உள்பட 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது. இந்த தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்றனா். அதற்கான விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவில் வெளியிடப்பட்டது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் அவை வெளியாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com