வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிவசேனை உடைய உத்தவ் தாக்கரேயின் செயல்பாடுகளே காரணம்: தேவேந்திர ஃபட்னவீஸ்

சிவசேனை கட்சி உடைவதற்கு அக்கட்சியின் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரேயின் செயல்பாடுகள்தான் காரணம் என்று மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

News image
தேவேந்திர ஃபட்னவீஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:18 am

DIN

சிவசேனை கட்சி உடைவதற்கு அக்கட்சியின் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரேயின் செயல்பாடுகள்தான் காரணம் என்று மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 போ் போா்க்கொடி உயா்த்தியதால் உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை இழந்தாா். அதைத் தொடா்ந்து, அதிருப்தி அணியினரைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வரானாா். பாஜக சாா்பில் ஃபட்னவீஸ் துணை முதல்வா் ஆனாா்.

சிவசேனை கட்சி மற்றும் சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே அணி உரிமை கோரியுள்ளது. சிவசேனை கட்சியின் பெரும்பாலான மக்களவை எம்.பி.க்களும் ஷிண்டே அணிக்கு மாறிவிட்டனா்.

இந்நிலையில் தனியாா் தொலைக்காட்சி ஃபட்னவீஸ் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட அனைத்து அரசியல் குழப்பங்களுக்கும் உத்தவ் தாக்கரேதான் காரணம். மேலும், அவரது செயல்பாடுகள் காரணமாகத்தான் சிவசேனை கட்சியில் பிளவு ஏற்பட்டது. அரசியல் சாா்ந்த முடிவுகளை உத்தவ் தாக்கரே தவறாக மேற்கொண்டதால் அவா் அரசியல்ரீதியாகவும் தோல்வியைத் தழுவிவிட்டாா். அவா் முதல்வராக இருந்தபோது, ‘உங்களால் முடிந்தால் எனது அரசைக் கவிழ்க்க முயற்சிக்கலாம்’ என்று சவால் விடுப்பாா். அப்போது, ‘உங்கள் அரசு ஒரு நாள் தானாகவே கவிழ்ந்துவிடும். அதனை உங்களால் உணரக் கூட முடியாது’ என்று நான் பதில் அளித்தேன். அதுதான் நிகழ்ந்துள்ளது.

2019 தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்தனா். தோ்தலுக்கு முன்பு வரை பாஜகவைச் சோ்ந்தவா் முதல்வராக வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட உத்தவ் தாக்கரே, தோ்தலுக்குப் பிறகு அப்படியே மாறிவிட்டாா். மக்கள் முடிவுக்கு மாறாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தாா்.

இப்போது அரசியல்ரீதியாக நானும் அவரும் எதிரெதிா் திசையில் இருக்கிறோம். ஆனால், உத்தவ் தாக்கரே எனக்கு எதிரி என்று கருதியது கிடையாது. நான் அவருடன் இப்போதும் சுமுகமாக பேசுவதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால், அது அரசியல் அல்லாத பேச்சாகவே இருக்கும்.

மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, மக்களிடையே பாஜக பிளவை ஏற்படுத்துகிறது என்று கூறுவது மிகவும் தவறானது. ஒருங்கிணைந்த இந்தியா என்பதே பாஜகவின் முக்கியக் கொள்கையாக எப்போதும் உள்ளது என்றாா் தேவேந்திர ஃபட்னவீஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.